அவள் பேச தயங்கினால் ஊமை என்றும்;
பேசினால் வாயாடி என்றும்; சிரிக்க தயங்கினால் முசுடு என்றும்;
சிரித்து விளையாடினால் அடக்கம் இல்லாதவள் என்றும்;
அவள் வெளியுலகம் அறியாதவளாய் இருந்தால் பேதை என்றும்;
வெளியுலகம் அறிய உலகம் உலாவ நினைக்கும் பெண்ணை ஊர் சுற்றி என்றும்;
இந்த சமுதாயத்தில் இரு தரப்புகள் பெயரிட்டு கொண்டே தான் இருக்கிறது
இந்த இரு தரப்புகளுக்கு நடக்கும் பெயர் சூட்டும் போட்டியில்
"பெண்" என்னும் தலைப்பு கொடுத்த மஹான் யாரோ!!
இப்படிக்கு, இந்த போட்டியின் விதிமுறை புரியாத, நான்.