உன் கண்களை காணாது காவல் செய்ய - கவிதை போட்டி

 ஓர் உடலில் ஈருயிரை சேர்க்கும் மாயம் செய்தவனே,

என்னவென்று கூறுவேன் உன்மேலான என் காதலை,

ஆயிரம் கவி எழுதிய ஒருவரும் உன் விழி கண்டதில்லை போலும்,

கண்டிருந்தால் ஆயிரம் கவி தேவையில்லை என உன் விழி சரணடைந்திருப்பர் என்னைப்போல,
உன்னைக்காணா உயிர்கள் மட்டுமே அழகை தேடி தேசம் அலையும்,

இறைவனும் அடையா வரத்தை பெற்றேன் உந்தன் கையில் நானும் சேர்ந்தேன்,

இருந்தும் இன்னுமொரு பேராசை மீண்டும் ஒரு ஜென்மம் நீ எடுத்தால் உன் இரு இமைகளும் நானாக வேண்டும்,

என்னையன்றி வேறெவளும் உன் கண்களை காணாது காவல் செய்ய!!!

உன் கண்களை காவல் செய்ய


W.Dhanusha
Previous Post Next Post