நரைத்த கிழவன் கிழவியின் நல்லுரைகள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அதட்டல், அண்ணன் தங்கையோடு சிறு பிணக்குகள்,
உறுதுணையாய் நிற்கும் உடன்பிறப்புக்கள், குடும்பத்தின் கற்தூண்கள்..!
குடும்பத்தினரை பிரியும் போது அழுகை, சேரும் போது சிரிப்பு,
சின்ன சின்ன பொய்யான வெறுப்பு, சண்டையிட்டு பேசாத நாட்கள்,
அவர்களை புரிந்துக்கொள்ள கிடைக்கும் அவகாசம், இதயம் இலகி தாமாகவே
அவர்களிடம் பேசும், அன்பின் வெளிப்பாட்டால் குடும்பத்தில்
ஆனந்த காற்று வீசும்..! இத்தனையும் நிறைந்தது தான் இனிமையான குடும்பம்...!