குடையிடம் கேட்டேன் மழை பிடிக்குமா என்று..... நனைந்து பார் என்று மடக்கிகொண்டது.......
விதையிடம் கேட்டேன் நீர் பிடிக்குமா என்று என்னை புதைத்து வை சொல்கிறேன்.... என உறங்கிபோனது......
இலையிடம் கேட்டேன் பனித்துளி பிடிக்குமா என்று என் கன்னத்தில் முத்தமிடு உணர்வாய் என அமைதிகொண்டது....
மலரிடம் கேட்டேன் குளம் பிடிக்குமா என்று மிதந்துபார் மலர்வாய் என மிதந்துசென்றது.....
மீனிடம் கேட்டேன் கடல் பிடிக்குமா என்று வந்து நீந்தி மகிழ் என துள்ளி குதித்தோடியது.....
முகிலிடம் கேட்டேன் நீ அழுவது எதற்கு என்று..... நீங்கள் அழுவதை நிறுத்த என்று பெருமழைகொண்டது.....
கதிரவனை கேட்டேன் ஒளி எதற்கென்று உன் வாழ்க்கை இருளாமல் இருக்க என்று ஒளிர்ந்தது.....
காற்றை கேட்டேன் நீ ஏன் அலைகிறாயென்று நீங்கள் அலைய நான் அலைய வேண்டியுள்ளது என்று பெரு மூச்சுவிட்டது......
நிலத்திடம் கேட்டேன் உனக்கு வளம் எதற்கென்று உங்கள் வாழ்வை நலமாக்க வேண்டியுள்ளதே....என்று அழட்டிக்கொண்டது.....
இப்பிரப்பஞ்சத்திடம் கேட்டேன் இயற்கை எதற்கென்று இயல்பாய் வாழ்ந்து மடிய என்று கூச்சலிட்டது.....