இரவும் கழிந்தது கனவும் கலைந்தது - கவிதை போட்டி

 அவள் மூடி திறக்கும் கண்களில் காதல் அழகு, 

அவள் பேசும் வார்த்தையில் மொழியழகு, 

அவள் உடுத்திய பிறகே ஆடையழகு, 

அவள் சேலைக்குள் மறைக்கும் வேலையில் இடையழகு, 

மயில் நடனம் அவள் நடையில், 

மனம்கமழும் அவள் குரலில், 

மீண்டும் என்று கேட்க தோன்றும் அவள் தமிழை. 

இரு வரியில் சொன்னால் அது கன்னி குரல் இன்னும் என்றால், 

அவள் அழகுக்கு என்ன‌ பஞ்சம் அவளை போற்றியும் தமிழில் வார்த்தை மிஞ்சும். 

அவள் நாணும் (வெட்கம்) எண்ணிக்கை தான் நான் காணும் நட்சத்திரம், 

அவள் தேடும் இரவில் வந்த அதிகாலை விடியல் நான்.  

இரவு, பகல் காணாத பூமியில் இளமை நிரைக்காத காதில், 

வானம் பார்த்த நான்! பூமி பார்த்து நீ !! யாரும் பார்க்காத நாம். 

"இரவும் கழிந்தது, கனவும் கலைந்தது".
Previous Post Next Post