எனது காதல் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தேன்...அதில் உன்னைப் பற்றிய தகவல்களே சேகரிக்கப்பட்டுள்ளது...
நம் பாதம் படர்ந்த இடத்தின் பெயர் இங்கே கவிதை படலங்களாய் உள்ளது...
ஒரு நாள் உன் விரல் தீண்டாத என் கருவிழி கல்லாகி போனதே நினைவிருக்கிறதா...
அந்தப் புகைப்படம் இதில் ஓவியமாய் இருக்கிறது...காதலால் நாம் தூங்காத இரவுகள் கணக்கிடப்பட்டதை ஏனோ,
எழுத மறந்துவிட்டேன்...இதோ எண்ணிச் சொல்கிறேன் மீண்டும் ஒரேயொரு வாய்ப்புக் கொடு...
என்னுயிரே எந்தன் இதயம் என்னும் கோவிலில் நீ தீபம் ஏற்ற வந்துவிடு உனக்காக காத்திருக்கிறேன்...