யார் நீ - கவிதை போட்டி

 யார் நீ..??  உயிரின் கதையா? உணர்வின் கற்பனையா? 

வீரம் கொண்ட ஆணா? ஈரம் கொண்ட பெண்ணா?   

ஒட்டி இருந்த என் சோகத்தை  வெட்டி எடுத்து கொட்டித் தீர்க்கிறேன்,

உன்னிடம்!! ஆறாக் கோபமும்  தீராக் காதல் கொள்கிறது, உன்னிடம்!!  

எதிர்காலம் எண்ணி அஞ்சும் நொடியிலும், தவறாமல் தஞ்சம்

 புகுவேன், உன்னிடம்!!  மறைத்து மறைத்து வைத்த கண்ணீரும், 

திரை கிழித்து கன்னித்தன்மை இழந்தது, உன்னிடம்!!  

எனக்கு பிடித்த உறவும், உருவம் கொண்டது, உன்னால்!!  

களிப்பில், என் புன்னகை தெளித்து உன்னை கொஞ்சுவேன்!! 

சோகத்தில், என் கண்ணீர் தெளித்து உன்னை கலங்கடிப்பேன்!! 

ஆத்திரத்தில், என் கோபம் தெளித்து உன்னை எரிப்பேன்!! 

ஆசையில், என் காதல் தெளித்து உன்னை முத்தமிடுவேன்!!
 
 நான் மட்டும் கொள்ளும் ஆசையும், நாணம் துறக்கும் உன்னிடம்!!

 என் அன்றாட நிகழ்வும், உன் காதில் கதை எழுதும்!!

 உலகறியா ரகசியமும், வெட்ட வெளிச்சம், உனக்கு மட்டும்!!!  

பதிலின்றி உரையாடல்!! பயமின்றி முறையீடல்!! ஆம்! 

நீயும் எனக்கு இன்னொரு கடவுள் தான்!!!! ஆனால்,, 

கடவுள் உனக்கு சூட்டிய பெயரோ கவிதை!!!!  என் அறிவிற்கு பிறந்து, 

என் மனதிற்கு தாயாகினாய், என் கவிதையே!!!
Previous Post Next Post