இதயம் கவர்ந்த உண் நினைவுகளும் - கவிதை போட்டி

 சிறு புன்னகையோடு அழகிய கவி எழுது என்றான்.... எதை பற்றி எழுதுவது..? 

உன் மீது நான் கொண்ட காதலை பற்றி எழுதுவதா....? இல்லை ,

உன் கண்களை காண்பதற்காக நாள் முழுக்க காத்திருந்ததை பற்றி எழுதுவதா.....?

 நித்தம் நித்தம் உன்னை நினைத்து பித்தம் கொண்டு அலைந்தேனே அதைப் பற்றி எழுதுவதா.....?

 இல்லை உன் மார்போடு சாய்ந்து உறங்குவதற்காக ஏங்கிய என் இரவுகளை பற்றி எழுதுவதா...?

 உன் வலிகளை என் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள தவம்கிடக்கிறேன் என்று எழுதுவதா.....?

 இல்லை உன் கண் அசைவில் மயங்கிப் போனதை பற்றி எழுதவா ........ எதை பற்றி எழுதுவது...? 

 யாவும் நீயாக மாற இந்த காற்றும் மலையும் இருளை அழகாய் மாற்றும்.. 

இம்முழுமதியோ உன்னிடம் கூறவில்லையா.....? என் காதலை... வாடும் மலரும்!! தேயும் நிலவும்!! 

கவிதையாய் இருக்கும்போது... என் இதயம் கவர்ந்த உண் நினைவுகளும் எனக்கு கவிதை தான்..
Previous Post Next Post