புரியாத பருவத்தில் தெரியாமல் தோன்றிய முதல் காதல் நீ...
உன் முதல் பார்வையில் என்னை முட்டால் ஆக்கியதை
இன்றுவரை உணர்கிறேன்... முதல் காதலில் உன்னிடம்
கொஞ்சி பேசவும் தெரியாமல், சண்டையிட்டால் கெஞ்சவும்
அறியாமல் காதலித்ததை எல்லாம் அழிக்கவே முடியாத
கல்வெட்டு வாசகம் எனவும் புலம்புகிறேன் பெண்ணே...
இனி பல காலம் கடந்தாலும் ..! ஆயிரம் ஆயிரம் உறவுகள் ..!
அழகழகாக தோன்றினாலும் ..! சிதையாத சிற்பம் -நீ ..!
என் வாழ்வின் வெளிச்சம் நீ..! இன்று நீ விலகிய பிறகு இருளில் நான்..!