முத்தமிழின் மூத்தவளே - கவிதை போட்டி

  முத்தமிழின் மூத்தவளே! முக்கடலை ஆழும் தரணி போற்றும் மகளே!

 உன்னை போற்ற கவிகள் போதவில்லை. கோதையே வன்மைகளால் 

சூழப்பட்ட - இம்மேதினியை கண்டு உன் உள்ளம் ஏன் வருடுகிறது? 

தரணியை உருப்பெடுத்தவளே! - உன்னால் தவழும் இப்புவியை சீரெடு. 

வன்மமே தலை நிமிர- இம்மேதினி இயங்கு வதால்பொரு ளுண்டோ? 

தரணியின் ஆதாரமே- நீ கோதையே! வன்மத்தின் செயலால் இருளில் 

விழுவதோ கோதை உன் வீரமோ? - காளியின் மகளே! தாயை வணங்குஉன்

 கண்ணியம் போற்று - மறுபிறவி மீழ் வன்மர்களை சீரெடு - இம்மேதினியை சிறகடி!! 

வன்மர்களை மரணப் படுக்கையில் தவிழ விடு - 

        அதுவே பெண்ணியம் காளியின் வீரக் கோதையே - நீவிர் தலைக்க!!!                     
Previous Post Next Post