துளியால் வந்து கொடியால் வளர்ந்து இடையை பிளந்து விழுந்தேன்
மண்னில் மடியில் தவழ்ந்து மார்பால் குடித்து இடையில் அமர்த்தி உயர்ந்தேன்
உன்னால் முந்தானை முகம் மறைத்து தொட்டிலிலே இசையமைத்து
கட்டுகட்டாய் கதை படித்து கண்ணசந்தேன் உன் குரலில் கண்ணமிட்ட
எச்சில் முத்தம் காயகாய மறுமுத்தம் காலிரண்டில் நான் கிடந்து காய்ந்த
நீரில் மேல் குளித்து கண்ணமதில் மைதடவி கண்ணுபடா காத்து நின்றாய்
வெண்ணிலவோ வான் நிறைய என்விரலோ போர்புரிய கிண்ணமதில்
நீரெடுத்து வெண்ணிலவை சிறைபிடித்தாள் அன்னமதை நானருந்த
தொப்புள் கொடி அருந்து தொடர்ந்தேன் வாழ்வுதனை ஒருநாள்
அரைஞாண் கயிறறுந்து அடைவேன் வானுலகை அதுநாள்
நாடும் வரை நாடியும் உன்னை பாடி அடக்கும் என்னை ஈன்றவளே