மலரே என்னை மறந்தாயோ - கவிதை போட்டி

 அச்சத்தின் ஆணி வேரில் தொடங்கி, அணு அணுவாய் 

அடி மனதிற்குள் வர காரணம் என்ன என்று சொல்  

 அன்பின் அடிதளமே! ஆசை செடியை வளர்த்து

 நினைவு தூரலில் மலர்ந்து காத்துக் கொண்டிருக்கும் 

மலரே என்னை மறந்தாயோ இல்லை மறுப்பாயோ?  
 
அனைத்தையும் உன்னிடம் கொண்டு வந்து சேர்த்து 

உன் மடி சாய ஏங்கும் இந்த கண்ணனின் குரலுக்கு 

உன் செவிச் சாய வில்லையே உயிரே 

 உன் கண் இமைக்கும் கருவிழிக்கும் இடையில்

 இறந்தாலும் இன்பமே அன்பே நம் மனதில்

 நாம் நமக்கே இந்த நொடிகள்  இந்த நொடிகள் 

இல்லாத உலகத்தில் நான் வாழும் வழி சாபமே அழகே   
Previous Post Next Post