வானம் தொட்டுவிட ஆசைதான் தொடக்கம் தெரியவில்லையே!
மின்னுகின்ற நட்சத்திரங்கள் - நீ அனிந்து கொண்ட ஆபரணங்களோ!
நெற்றியிலே திலகமாக உதித்ததுதான் சூரியனோ !
கூந்தலிலே சூடிக்கொண்ட மலர்தான் நிலவோ!
உன்னுள்ளே, எண்ணிலடங்கா இயற்கை இரகசியங்கள்!
இவை அத்துனையும் மறைக்க மேகமெனும் ஆடையோ!
கிரகங்கள் அனைத்தும் புதிய உலக படைப்புக்களோ!
அதில் வாழும் உயிர்கள் உன் பிரதிபலிப்பின் வடிவங்களோ!
கற்பனைக்கு எட்டாத கண்கவரும் காட்சியே!
உன்னை ஜோடி சேரவே கடல் நீலமானதோ !