என்னை விட நீ அழகென்று - கவிதை போட்டி

 மாங்குயிலும் மன்றாடி  கேட்குதடி மங்கை உன் இசைக்குரலோ?

😅தேனீக்கள் மொய்க்குதடி மங்கை உன் தேனிதழில்?🫂 

வெளிச்சம்  மயங்கி முத்து மணி  முறைக்குதடி மங்கை உன் சிரிப்பழகில்?💋 

தோகை மயில் தோற்குதடி மங்கை உன் தோளழகில்?🌀♥️

மாங்கனிகள்  மண் விழுந்து மன்றம் வந்து  மாய்குதடி மங்கை உன் மார்பழகில்? 

சுற்றி கட்டிய  சேலையே  சுற்றி வந்து  சுத்துதடி மங்கை உன் இடையழகில்🙈💋 

கட்டழகு வடித்தே கொள்ளுதடி💯படித்த உதடும் படுத்துதடி  என்னவென்று 

 சொல்ல ஏங்கி தவிக்க விட்டாய், இது போதவில்லை என்றால்  நிலவை கேள்!! 

அதுவே வெட்கப்பட்டு கூறும் என்னை விட நீ அழகென்று!!!
Previous Post Next Post