நீல வானத்தில் மேகங்கள் முழங்கிட செங்கதிர் சூரியனும் ஓய்வு கொண்டது
குயில்கள் எக்களிப்பிட்டு கூவிட வையகமே புன்னகை கொண்டது
மண்ணின் மணம் வீசிடவே அவள் சுவாசத்தை நான் தேடினேன்
தூவானம் முத்துக்களாய் சாரலிடவே அவளைப் பார்த்து மெய்மறந்தேன்
அவள் மழையில் ஆடிடவே கால் கொலுசின் மெல்லிசையில் நான் நனைந்தேன்
கரைபுரண்டு வெள்ளம் ஓடிடவே காதல் வெள்ளத்தில் நான் மிதந்தேன்