சிரித்து குலுங்கும் அருவிகளை மடியில் ஏந்தி கரையை செதுக்கிக் கொண்டே
செல்கிறாள் போகும் வழியெல்லாம் எவரேனும் உள்ளனரா?
எவ்வளவு அற்புதமாய் செதுக்குகிறாய்!! மாலையை வாங்கிக் கொள்...
கொஞ்சம் ஓய்வு எடு என செவி மடுக்கவும் யாரும் இல்லை இருப்பினும்
கரைகளை செதுக்கிக் கொண்டே செல்கிறாள் பாறைகளில் முட்டி
முட்டி தன் வழியை சரி செய்கிறாள் அடை மழை அடித்தாலும்
கடல் போல் இவள் சீறுவதே இல்லை... கானகத்து
தேவதையாய் ஓடிக் கொண்டே இருக்கிறாள் தன் கடலைத் தேடி.......