குறிஞ்சி நிலத்தில் குதூகலமாய் வாழ்ந்தான் ...
பாலையில் கூட மனிதன் பட்டினி கிடந்து மடிந்ததில்லை...
இன்று அறிவியல் யுகத்தில் அல்லல் படுகிறான்!
அரைவயிற்று கஞ்சிக்கு... அடுக்கு மாடியில் இருப்பவனோ
கொடுக்க மறுக்கிறான்... உடன் இருப்போரின் வாழ்க்கையையே
கெடுக்க நினைக்கிறான்... வாழ்க்கை ஒரு விநோதம்!
வாழ்ந்து பார் அது கற்றுக் கொடுக்கும் பல வேதம்!
இங்கு எவருக்குமில்லை பேதம்!
உனக்கும் எனக்கும் மனிதம் என்ற ஒன்றே போதும்!!!