நதியே நீ வானில் இருந்து இறங்கும்போது வெண்ணிற
ஆடை உடுத்திக் கொண்டு வருவதைப் போல் உள்ளது.
அந்த கணம் நீ என்னை பார்த்து சிரிப்பது போல் உள்ளது
ஆனால் நீ சில சமயங்களில் அமைதியாய் இருப்பதைப் போல் உள்ளது
சில சமயங்களில் கோபப்படுவதை போல் உள்ளது .
உன் அமைதிக்கு காரணம் சுற்றுச்சூழலின் தூய்மை.
உன் கோபத்திற்கு காரணமோ புவிவெப்பமயமாதல்.
நதியே நீ என்னுடையவள். நான் உன்னை காண தினமும் வருவேன்.