இயற்கை-முயன்றால் காப்பாற்றலாம் ஒரு துளி பனி தான், ஒப்பற்ற அழகு!
பேரொளிதான் சூரியன், உனக்குள்ளும் ஈரம் உண்டு!
ஓய்வில்லா அலைதான், உன்னை ரசிக்க தோய்வதில்லை மனம்!
அளவில்லா ஆச்சரியங்கள், அதை ரசிக்க போதவில்லை இரு கண்கள்!
நீ மென்மையாக இருக்கும்வரைதான் தென்றல், உன்னை சீண்டினாலோ சூறாவளி!
அழகாக பாய்ந்தால் அலை, ஆரவாரபட்டால் வெள்ளம்!
நிதானமாக இருந்தால் நிலம், கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் பூகம்பம்!
விளக்கேற்ற வரும் தீபமும் நீயே, உன்னை உரசினால் பற்றி எரியும் காட்டுத்தீயும் நீயே!
எல்லையில்லா ஆகாயமும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஆச்சரியங்களும்!
உம்மை சூறையாடிக்கொண்டிருக்கும் எங்களை, இன்னும் சுகமாக பார்த்துக்கொள்கிறாயே,
உம்மை இயற்கைத் தாயென்று அழைப்பது சரியே!
உன் வாழ்நாளைக் குறைத்து, எல்லையில்லா உமக்கு,
எல்லைக்கோடு போட்டுக்கொண்டிருக்கிறோமே, எங்கள் எல்லை உன் கையில்தான்!
மாசற்றுக் கிடக்கிற உமக்கு, மறு பிறவி தருவோமா?
வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பது மனிதன் மட்டுமல்ல,
இயற்கையும்தான் !! பல நூறாண்டு வாழ, எங்கள் உயிரையும் எடுத்துக்கொள்!
இப்போதைக்கு, நீ வளர,என் கவிதையை விதைக்கிறேன்!!