நிஜமெல்லாம் கணவாகி...கனவெல்லாம் நிஜமானால்...
நிலையில்லாத எம்மனது நிம்மதியடையும்!!
வலிகளால் வழிமாறிய என் கால்கள்.,
நான் செல்ல நினைத்த வழிகளில் தடம் பதிக்கும்!!
உடைந்துபோன இறக்கைகளை உதிர்த்துவிட்டு
புதிதாய் இறக்கைகளை உருவாக்கி உலகைச் சுற்றுவேன்!!
காலத்தால் கல்லான என் மனதினை கலங்காமல் காப்பாற்றுவேன்!!!