கருவிலே! நீ கன்னி என்று தெரிந்தால், உன்னை களைக்க நினைக்கும்,
இந்த கடங்கார உலகத்தில், கண்ணீருடன் நீ பிறந்த கதையை,
இந்த கவிஞனும் கொஞ்சம், சொல்லணுமா !!! (((__குழந்தை பருவம்__ )))
இந்த மண்ணில் பிறந்த, மாதவர் இனமே, உன் மதிப்பு தெரியாத,
பல மன்னவர்களும் உண்டு, இந்த மண்ணில்,
பெண் பிள்ளை பிறந்தால், பெருநஷ்டம், என்று சொல்லி,
கண் திறக்கும் முன்னே, கல்லிப்பாலை ஊற்றி,
தாலட்டு கேட்டு, உறங்க வேண்டியவள்,
சுடுகாட்டில், அரிச்சந்திரனுடன் விளையாடி,
அசதியில் உறங்கி கொண்டுயிறுக்கிறாள்,
உத்தமியின் மகளே, உன் பிறப்பில் தவறு ஒன்றும் இல்லையடி,
அது உற்றார் உறவினர், தவறு மட்டுமே நீ பள்ளிக்கு செல்லும் வேலையிலே,
உனக்கு பாலியல் தொல்லை கொடுத்த, உன் பாசக்கார தோழர்களுக்கும்,
இதை நான், பகிர நினைக்கிறேன், குமரி பருவத்தில் சுமந்த துக்கம் அல்ல,
உன் தாய், குழந்தை பருவத்திலேயே சுமந்த துக்கம்.