செவிலியர்கள் சேவை - கவிதை போட்டி

 அன்னையின் அன்பை மருந்தில் கலந்து... 

ஆறுதல் மொழியினை வார்த்தையில் கலந்து... 

இனிதே மருத்துவர் சொல்லை சிரமெற்கொண்டு... 

ஈடில்லா சகிப்புத்தன்மை கொண்டு...

 உறவுகள் கூட அண்டாது உடல் பிணி கண்டால்...

 ஊக்கம் தரும் அண்டமே உன் பணி கண்டால்... 

எதிலும் ஒப்பிடா உன்னத சேவை... 

ஏற்றத் தாழ்வு பாராத தன்னலமற்ற சேவை...

 ஐம்பூதங்களும் பொறாமை கொள்ளும் உன் பொறுமை கண்டு... 

ஒன்பது கோள்களும் குழப்பம் கொள்ளும்

 உன் இரவு பகல் பாரா சேவை கண்டு... 

ஓயாமல் உழைப்பதைக் கண்டு துடிக்கும் 

இதயமும் சற்று மயக்கம் கொள்ளும்... 

ஔவையின் துணிவு கண்டு உயிர் குடிக்கும்

 பிணியும் சற்று தயக்கம் கொள்ளும்... 

எஃகின் திடம் போன்றது செவிலியர்களின் சேவை...!!!
Previous Post Next Post