திருமணம் எண்ணும் கோலத்தில் நீ இருக்க......
இறப்பு எண்ணும் கோலத்தில் நான் இருக்க.....
உன்னையோ அரிசி தூவி ஆசிர்வதிக்க....
என்னையோ பூக்கள் தூவி மூடிவிட....
உன் கையால் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு இட....
என்னையும் இறுதியாய் வலம் வந்தார்கள் மூன்று முறை....
அவள் நெற்றியில் அழகாய் குங்குமம் இட்டாய்....
என் நெற்றியில் அழகாய் இட்டார்கள் ஒற்றை நாணயத்தை....
இறுதியில் அக்னி சாட்சியாய் அவளை ஏற்றுக்கொண்டாய்.....
இறுதியில் என்னையும் ஏற்றுக் கொண்டது அக்னி....