யார் அவள் என்று தெரியாது தெரு ஓரத்தில் நான் நின்றேன்
நிலவைப் போல் ஒளி வீசிச் சென்றாள் அன்று விழுந்தவன் நானடி
இன்றும் எழவில்லை ஏனோ தெரியவில்லை உன்னைப் பார்க்க
ஒவ்வொரு நாளும் தவிக்கின்றேன் நீயோ சிறு பார்வை வீசி
என்னை சிதற வைத்தாய் என் மனம் என்னிடம் இல்லை
தொலைந்த என் மனதை தேடுகிறேன் உன் சிறு பார்வையில்
என் மனதிற்குள் ஏதோ புது வித உணர்வு தோன்றுகிறது
உனைக் காணும் போதெல்லாம் என்ன உணர்வு
இதுவென்று நீயே வந்து சொல்லடி என் கண்மணி