வஞ்சிட்ட மாயப்பிணி நீளுமே - கவிதை போட்டி

 உன்விழி இருவிழி கருவிழி என்வழி உயிர்வழி பாயுதே! 

சிறுவலி உள்வழி நீங்கவே குறுநகை புன்னகை போதுமே! 

அன்பினி கவியெனப்  படைக்கவே உன் விரல்நுனி தீண்டலும் மீதமே! 

மாரெனும் தாயகம் கொள்ளவே போர்முனை கண்டெனும் மீளுமே!

 மெஞ்சிட்ட உன் குரல் கேட்கவே வஞ்சிட்ட மாயப்பிணி நீளுமே!

 கனிந்திட்டச் செவ்விதழும் பதியவே தனித்திட்ட உயிர் தாகமும் தீருமே!
Previous Post Next Post