உன் முகம் பார்த்திட வரம் வேண்டும் அம்மா - கவிதை போட்டி

 உனது மடியில் உறங்கவே,  ஏங்கும் எனது கன்னங்கள்,  

உனது மடியில் சாய்ந்தாலே,  பறந்து போகும் எனது துன்பங்கள்..., 

 சிறு சிறு தவறு செய்வது எனது குணங்கள், 

அதனை சரி செய்ய ஓங்கும் உனது கரங்கள், 

நீ அடித்ததால் எனக்கு மட்டுமே வலிகள்,

 ஆனால் வலிகள் தந்து விட்டாய் என அழுவது உனது கண்கள்...,

  இரவில் நான் உறங்கவே, உன் விழி ஓரம் உறக்கத்திலே, 

நீ தாலாட்டுப் பாட்டு பாடியே, என்னை உறங்க வைப்பது நீ ஒருத்தியே...,

  உன்னோடு வாழ தான் அம்மா, இந்த ஓர் ஜென்மம் எனக்கு போதாது அம்மா
கடவுள் முகத்தை பார்க்கும் வரம் வேண்டாம், 

வாழ்நாள் முழுவதும் உன் முகம் பார்த்திட வரம் வேண்டும் அம்மா...
Previous Post Next Post