யாரோ ஒருவரை, ஏதோ ஒரு பயணத்தில் சந்தித்து,
ஏதும் பேசாமல், அவரைப் பற்றி ஏதும் தெரியாமல்,
ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை நம் மனதிற்கு பிடித்து,
சில நொடிகளில் நமது நிறுத்தம் வந்துவிடுமோ!
என நினைத்து வருந்தி,நமது நிறுத்தத்தில்
இறங்க முடியாமல் தவிப்பது தான் காதல்.