ஏறும் இடமும் சேரும் இடமும் ஒன்றுதான்
இருந்தும் நம்மிடையில் வேறுபாடு உண்டுதான்
பலதரப்பட்ட மனிதருண்டு பலவகையான அனுபவுமுண்டு
குழந்தையை ரசிக்கும் கொலைகாரனுண்டு
யாருக்கோ கலங்கும் மனிதருமுண்டு இவர்களிடம்
எஞ்சி நிற்பது தான் மனிதநேயமோ தகுதியின்
பேரில் தனிப்பெட்டிகள் வேண்டுமோ காற்றும்
தகுதி பாரின் சுவாசம் தான் மிஞ்சுமோ
நல் எண்ணம் எனும் தண்டவாளத்தில் பயணிப்போம்
தடம் புரளாமல் சேரும் இடம் சென்றிடுவோம்.