நாம் ஒருவரை புகழ்ந்து பேசினால் அவர்களும் நம்மை புகழ்கின்றனர்.
நாம் ஒருவருக்கு வெகுமதி அளித்தால் பததிலுக்கு வேறு ஒரு வெகுமதி கிடைக்கின்றது.
இப்படி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்றவாறு நமக்கு
அதே வகையில் ஏதோ ஒன்று திரும்பக் கிடைத்து விடுகின்றது.
என்னவோ தெரியவில்லை? உன்மீது அளவற்ற அன்பை செலுத்துகின்றேன்.
பதிலுக்கு நீ இதுவரை ஓர் புன்னகையைகூட உதிர்த்த தில்லை.
உலக வழக்கம் உனக்கு தெரியவில்லையா? அல்லது நீ வழக்கத்திற்கு மாறானவளா?....