யாருமின்றி தவித்தேன் அந்த நடு இரவினிலே,
ஒளியும் இல்லை, ஒருத்தியும் இல்லை,
கண்மூடினால் உறக்கமில்லை,
விழித்தெழுந்தால் விடியலும் இல்லை,
சிறகடிக்கும் ஆசை மட்டும் நான் சுமக்கும் பிள்ளை...
இணையில்லா உயிரும் இன்று ஆறறிவு பெற்றது
இணைந்து வாழும் மனிதமோ பல வேற்றுமை
சொல்லைத் தேடுது வானில் திரியும் பறவை கூட்டம்
ராகம் என்ன பாடுது நீரில் இலைப்போல நம்மை
நேரம் இழுத்து ஓடுது வாழ்க்கை என்னை உற்று
நோக்கி உதைத்து சிரிக்குது கண்விழித்து வியந்தேன்,
நாள் மீண்டும் அதை தொடங்குது.