பெற்ற தாய் தந்தைக்கு மேலாக கணவனின் பெற்றவரிடம்
அன்பு காட்டும் மனைவி தன் பெண்பிள்ளைபோல
தன் மருமகளை பார்க்கும் மாமன் மாமி கரம் பிடித்தவளை
தாயாகவும் குழந்தையாகவும் சக தோழியாகவும்
காதல் செய்யும் கணவன் தன் தலைவனின் நிலையறிந்து
காதலுடன் உற்ற துணையாயிருக்கும் பொறுமை மிகு மனைவி
வீட்டினுள்ளே சிறகுகளாய் பறந்து இன்பம் நிறைக்கும்
குழந்தைகள் அழகான குடும்பம் அன்பால் நிறைவது...