இப்போது நினைத்தாலும் நம்பாத அதிசயத்தை காதலே நிகழ்த்தி இருக்கும்..
எப்போதும் நினைத்தாலும் சுவைக்கிற சுவையும் காதலே பரிமாறி இருக்கும்..
தப்பேதும் செய்யாத தண்டனையில் மீளாவலி காதலே கொடுத்திருக்கும்..
ரசனைகளைப் பிழிந்து ராகங்கள் பாடிவசனங்களில் காவியம் காட்டியிருக்கும்..
விசனங்களை துரத்தி நெருக்க நேரத்தில் முகத்திலோவியம் தீட்டியிருக்கும்..
செய்யாதவர்க்கு ஒரு எச்சரிக்கை இந்த ஆழியாழக் காதலைச் செய்து பாருங்கள்..
செய்தவர்க்கு ஓர் விண்ணப்பம் கொய்தலென்று தெரிந்தும் அறிவுரை கூறாதீர்கள்..
ஏனெனில் காதல் ஒரு பச்சிளம் அதற்கு உங்கள் பாசை தெரியாது..
காதல் ஒரு மூதாட்டி அன்பு மொழியைத் தவிர வேறெதும் அறியாது!!