ஓ பருவமழையே! நவம்பர் மாதம் ஆகிவிட்டால் தவறாமல் வந்துவிடுகிறாயே!
கருணை காட்டாமல் கனமழையாய் கொட்டி தீர்த்து விடுகிறாயே!
பல மாதங்களாக கோடையின் வெப்பத்தை
போக்கி குளிர்ச்சி தந்த உன்னை போற்றுவதா?!!
இல்லை ஆவேச மழையாய் எங்கள் குடியிருப்புகளுக்கு
விருந்தாளியாய் விரைவதற்கு உன்னை தூற்றுவதா?!!
சொல் மழையே சொல்!!! உன்னை போற்றுவதா? இல்லை தூற்றுவதா?