காத்திருப்பதும் சுகமே - கவிதை போட்டி

காலையில் கண்விழித்து கண்ணாடியில் முகம் பார்க்கையில்!...

உனக்காக கண் சிமிட்டும் நொடியில் கடந்துபோகும்

தென்றல் எனை தொடுகையில்!...

உனக்காக கஞ்சத்தனம் காட்டும் கண்களுக்கு

காட்சியளிக்க நீ வருகையில்!...

உனக்காக பிடித்த பொருளை பிடித்த மாத்திரத்தில்

ரசித்து வாங்கி வருகையில்!...

உனக்காக மனமின்றி மாலை நேரத்தை வரவேற்கையில்!...

உனக்காக பல நாள் இரவுகளில் கண்விழித்து உறங்கையில்!...

உனக்காக காத்திருப்பதும் சுகமே... 
Previous Post Next Post