முதுமையில் உன்னோடு - கவிதை போட்டி

 பனியார குழி கன்னக்காரி
எலி பொந்து கண்ணழகி
பனி போர்வை முடியழகி
அலையோடிய தோல் அழகி
பூகம்ப காலோடு பேரழகியே
உன்னில் தோற்றேனடி... 🌹

வரிக்குதிரை நெஞ்சழகா
காந்தார குரலழகா
அறுபதிலும் ஆணழகா
யானை நடை பேரழகா
உன்னில் தோற்றேனடா... 🌹

உன் மடியில் நான் தூங்க
தள்ளாடும் வயதிலும் நம் காதல்
கட்டை ஏறும் நேரத்திலும் உன்னோடு 
என் காதல் என்னவளே / என்னவனே...🌹
Previous Post Next Post