பூமித்தாயின் உடலில் மண்ணென கருவாகி
பலரின் உழைப்பால் கல்லென உருமாறி
தீ எனும் பிரசவத்தில் பிரசவித்து
செந்நிற குழந்தையாய் பலரின் கைகளில் தவழ்ந்து
கட்டிடம் என உருப்பெற்று வாழும் காலம் வரை
சிறப்பாய் வாழ்ந்து வீழும் காலத்தில் மீண்டும்
பூமித்தாயின் மடியில் மண் துகளாய் விழுகிறாய்🧱