உனக்கும் எனக்குமான கதைகள் - கவிதை போட்டி

உனக்கும் எனக்குமான கதைகள் ஏராளம்..........

தனிமைப்படுத்தப்பட்ட கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட 

கனவுகளும் அறுவடைக்காகவே காத்திருக்கிறது.......

கிழவியிடம் வாங்கிய நவாப்பழம்,

கடைவீதியில் தேய்ந்த ரப்பர் செருப்பு,

பின்னொரு நாளில் பெய்த மழையில் விரல்களுக்கிடையே 

மின்னலலை பார்த்த கணங்கள்

 எல்லாம் நிந்தையில் பறக்கும் சிறகுகள்...........

சதுரங்களில் போடப்பட்ட நாற்காலியில்

 நீ இல்லாமல் என் நினைவுகளில் ஓடும்

 கதைகள் காற்று தொடாத மழைத்துளிகள்...........

நான் உன்னிடம் கேட்பதெல்லாம் வனத்தில்

 சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி பூக்களில் 

இளைப்பாறும் நேரம் மட்டுமே...........

நேற்று முடிவடைந்த இரவுகள் வரை நானும்

 என் நாற்காலியும் அந்நியப்பட்டே நகர்கிறோம்............... 
Previous Post Next Post