உன்னை காண ஆவல் - கவிதை போட்டி

 தங்க ரதம் ஒன்று திருவிழா வந்தது....

ரதமென்பதா ரதியென்பதா குழம்பியது மனது.... 

முகம் பார்க்க முடியவில்லை எனினும்.....

என்னவள்  இவளே என இதயம் துடிக்குது.... 

வேண்டாம்  விலகு என்று மூளை தயங்குது....
 
இருந்தும் இதயம் பார்க்க  கண்களை தூண்டுது....
 
அசையாத தேராய் இப்போது நானேன்.... 

ஒரு முறையாவது பாரடி கண்ணே.... 

என் மனம் அமைதி கொள்ளட்டும்.....
Previous Post Next Post