ஆசிரியர் தினம் - கவிதை போட்டி

 அ எழுத விரல் பிடித்தால் அம்மா மண்ணில்

அ எழுத விரல் பிடித்தார் ஆசான் நெல்லில்

அன்று முதல் இன்று வரை பல மாற்றம் தந்தீர் என்னில்

பாரினிலே ஊரினிலே படித்தால் தொழில் எத்தனையோ

எமை வளர்த்திடவே படித்திடவே வந்த தொழில் ஆசிரியம்

ஏட்டுக்கல்வி  விட்டு செயற்பாட்டுக்கல்வி வழிகாட்ட வந்த குருவே

கற்க தினம் உம் சேவை கண்ட பார் கொண்ட தினம் இன்று

உமை ஏணியாக மாற்றி எமை ஏற்ற வந்தாய் பாரினிலே 

ஒளிமயமாய் நாம் மிளிர வாழ்க்கை எனும் ஒளிச்சுடரை 

விளக்கேற்ற வந்தாய் ஒரு படையே வென்றாக
 
ஒர் தளபதியே கருவாவன் ஓர் படையே நன்றாக 

ஓர் குருவே கருவாகும் அறிவைத் தரும் அட்சயபாத்திரமே 

இறைவன் மண்ணில் எடுத்த ஆயுதமே நீங்கள் 

சிறிகமலநாதன் தருக் ஷன்
Previous Post Next Post