அடிவயிற்றில் முளைத்தவன்
ஆசையால் வளர்ந்தவன்
இன்பத்தின் உருவானவன்
ஈட்டலில் தோன்றியவன்
உறவுகளின் தொடர்ச்சியானவன்
ஊடலின் பிரதியவன்
எச்சத்தின் மிச்சமானவன்
ஏங்கும் செல்வமானவன்
ஐக்கியத்தின் கருவானவன்
ஒருங்கிணைப்பின் ஒலியானவன்
ஓராட்டு இசைக்கு உரியவன்
ஔபத்தியம் கொள்ள உயிரானவன்