இரக்கமற்ற காலம் - கவிதை போட்டி

காலம் மிகவும் கடுமையானவன் கடந்த ஒரு நிமிட தவறை திருத்த 

ஒரே ஒரு சந்தர்ப்பம் கேட்டு மனம் ஓலமிடுவதை பார்த்தும் 

சிறிதும் அசராதவன் காலம்!! அழகு மலழை பிறந்த கணம் 

அறிவில்லா அறிவியல் தோற்ற கணம்

நான் செய்த பிழையோ யார் செய்த பிழையோ

பல வருடம் நரகத்தில் நான் தவிப்பதை கண்டும் சிறிதும்

இரக்கமற்ற காலம்!! ஒரே ஒரு முறை ஒரே.. ...ஒரு முறை

இந்த பாவபட்டவள் கண்ணீருக்கு இரக்கம் காட்டு

என்னை அந்த ஒரு நாளில் கொண்டு சேர் என்னையே

காணிக்கையாக்கி என் பிஞ்சு உயிரின் நலம் காப்பேன்
Previous Post Next Post