ஏழ்மையை விரட்டுவோம் - கவிதை போட்டி

 பணம் இருக்கும் இடத்தில் மனம் இருப்பதில்லை

மனம் இருக்கும் இடத்தில் பணம் இருப்பதில்லை

பணம் பத்தும் செய்யும், ஆனால் பாவப்பட்டவர்களுக்கல்ல

கண்முன்னே பசி கொண்டு பிள்ளையைப் பார்த்தும்

காக்கை சோறு வைக்கும் உலகம் இது! 

உடலை மறைக்க உடை தேடும் சிறு பென்டுகள் இருந்தும்

உடை கிழித்து அணியும் நாகரிகம் இங்கே! 

கல்வி என்னும் கருவி ஒன்றே ஏழ்மை விரட்டும் கோல் லாட

அதை தட்டாமல் கையில் கொண்டு இன்னும் ஒரு படி உயர்த்து 

உன் நாட்டை உன் சோர்ந்த கண்களும் கான வேண்டும்

கலாமின் கனவை இங்கே கசியும் கண்ணீரை விட உதிரும் வியர்வைக்கு

சக்தி அதிகம் உழைத்து வா மேலே உன் சகோதர்களை உயர்த்திட வா 

பணம் பெரிதல்ல  நல்ல மனம் வேண்டும் என உணர்த்திடு உலகிற்கு

வட்டமான வாழ்விது நாம் உயரும் நாள் வந்தது வா, 

நாம் ஒன்று சேர்ந்து ஏழ்மை விரட்டுவோம்!!!! 

Kiruthiga Natrayan
Previous Post Next Post