நான் போகும் பாதையில் புது விடியல் பிறக்கிறது
அதை நோக்கி மனம் போக சொல்கிறது
இயற்கை அழகை கண்கள் ரசிக்கிறது
அந்த அமைதியான தருணத்தை இதயம் நேசிக்கிறது
ஓடும் நதியின் சத்தம் காதில் கேட்கிறது
கொஞ்சும் கிளிகள் வானில் பறக்கிறது
ஒரு கால் அடி தடம் என் கண்ணில் தெரிகிறது
ஒரு சிரிப்பின் ஓசை என்னை தாண்டி செல்கிறது
அதை தேடி என் மனம் முன்னால் போகிறது
பூக்களின் வாசம் காற்றில் மிதக்கிறது
வெண்பனி சிலை போல் உருவம் ஜொலிக்கிறது
கார் மேகம் வருடும் கூந்தல் தெரிகிறது
இரு மீன்கள் நீரில் நீந்துவது போல கண்கள் இருக்கிறது
செக்க சிவந்த உதடுகள் சொல்ல முடியாத அழகு அவள்
பேரழகியை நேரில் கண்டேன் வானத்து தேவதையா இல்லை
பூலோக மங்கையா என வியந்து நின்றேன்
கனவா அல்லது நிஜமா என தெரியாமல் விழித்து இருந்தேன்
காதல்லில் கரைந்து விட்டேன் அவளை அந்த நொடியே
காதல்லிக்காக ஆரம்பித்து விட்டேன்