எந்தன் கனவு காதலா!!!
கண்மூடி காதல் கொண்டேன் உன் மீது நான்....
காத்திருக்க நேரமில்லை என்னிடம்!
கண்கள் களைப்படைந்து உறங்க நினைக்க....
கனவிலும் உன் முகம் கண்டு
சிரிக்குதடா என் இதழ்... கள்வனே!!!
உந்தன் சட்டை ஸ்பரிசம் நான் அறியேனடா.....
இருந்தும்; என் மனதை தழுவுதே உந்தன் மேனி....
சிறு பொழுது உந்தன் முகம் மறைந்தாலும்!
எந்தன் உறக்கம் உயிரற்று போகுதடா....
நான் ஓராயிரம் ஆண்டு வாழ்வை
ஒரு நொடியில் வாழ்வேனடா!
ஒரு முறை நீ எதிரில் தோன்றி
உண்மைக்கு கொஞ்சம் உயிர் கொடுத்தால்....
என் கோரிக்கைக்கு கொஞ்சம் செவி கொடடா...
என் கனவில் வாழும் கள்வா.......
அர்ச்சனா சாமிநாதன்