இவ்வுலகம் படைக்கப்பட்டதும் உன்னால்....
உயிர்கள் படைக்கப்பட்டதும் உன்னால்....
இன்பங்கள் படைக்கப்பட்டதும் உன்னால்...
கவிதைகள் படைக்கப்பட்டதும் உன்னால்...
ஸ்வரங்கள் இசைக்கப்பட்டதும் உன்னால்...
சங்கீதம் பாடப்பட்டதும் உன்னால்....
சலிப்புகள் இல்லா வாழ்க்கை வந்ததும் உன்னால்....
கதைகளில் கேட்ட தேவதையை கண்ணால் கண்டதும் உன்னால்....
பகலில் மறையா நிலவை கண்டதும் உன்னால்....
பனியில் உறையும் குளிருக்கு உருவம் வந்ததும் உன்னால்....
உலகிற்கு உயிர்களை படைத்த பிரம்மாவே...
காத்து வளத்திட்ட விஷ்ணுவே....
அதர்மங்களை அழித்திட்ட சிவனே....
அவளின்றி அணுவும் அசையாது எல்லாம் அவளே
எல்லாமும் அவளே அவளே இவ்வுலகின் ஆவல்...
வாழ்த்துக்கள் என்ற ஒற்றை வார்த்தை போதாது
ஒட்டு மொத்த உலகின் இன்பங்களை ஒரு சேர கண்முன்
நிறுத்திய தேவதைகளுக்கு உலகம்
இயங்கும் நொடிகள் வரை தினம் தினம் தினமே...
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்....