உன்னை பார்த்த முதல்நாளில்..
உன் பெயர் தெரியாது, உன் ஊர் தெரியாது
உன் விறுப்பங்கள் என்னவென தெரியாது,
உன் வெறுப்புகள் என்னவென தெரியாது
உன் முகவரி தெரியாது, ஏன்?
உன் முகம் கூட முழுவதுமாய் தெரியாது
உன் தோழிகளை தெரியாது,
உன் தொலைபேசி எண் தெரியாது
உன் குரல் தெரியாது, உன் குணம் தெரியாது
உன் இல்லத்தை தெரியாது,
உன் உள்ளத்தில் யார் இருக்கிறார் என்பது தெரியாது
இவ்வாறு தெரியாத பலவற்றை தெரிந்துகொள்ள நினைத்தேன்...
அன்று முதல் காதல் செய்ய தொடங்கினேன்..
மன்னிக்கவும் சிறிய பிழை அன்று தான்..
முதல்காதல் செய்ய தொடங்கினேன்...
மா.ஸ்ரீராம்