கருவறையிலயே கதைச் சொல்லி !
முகமறியாலயே பாசம் தெளிந்து !
பிறந்த போது, பதற்றம் தணித்து !
தவழ்ந்த போது தடைகள் தகர்த்து!
நிமிர்ந்த போது நித்தம், நித்தம்
நானும் நடக்க என்னுடன் நீயும் நடக்க..
கையைப் பிரிந்து நான் தனியே நடக்க..
எனினும் என்னை பிரியாமல்,..
எனக்காக தெய்வம் போற்றி!
கலங்கிய போது கரம் தந்து!
துன்பங்களால் இடிந்த போதும்..
"தளராதே" என மடி தந்து!
நான் மகிழ்ந்த நொடிகளில்,
இன்பத்தில் தளைத்த நொடிகளில்..
என் தவறுகள் நீ தாங்கி!
பெருமைகளை என் மேல் போர்த்தி!
என்னை நீயே தாங்க!
உன் அன்புக்காக நான் நித்தம் ஏங்க,..
கருவறையில் மீண்டும் பிறக்க விரும்பினேன்..
ஆனால் வகுப்பறையில் அதே சுகம் கண்டேன் தாயே!
ஆசிரியர் என்பவரும் தாயென உணர்தேன்!