ஆணிற்கினையாய் தோன்றியவளே
அன்பிற்கு நிகரானவளே தேவதை வடிவானவளே
குண மலரே கருணை மழையானவளே
வழிகாட்டும் ஒளி விளக்கே நற்குணம் பொருந்தியவளே
நன்மை பயக்குபவளே உயிரை கொடுத்தவளே
இன்னுயிரையம் கொடுப்பவளே இதய துடிப்பே
துடிப்பின் ஒலியே எனை செதுக்கும் சிற்பியே
தொப்புள் கொடியாள் உறவை இணைத்த என் அன்பு தாயே.
ஜெ.வெற்றிவேல்