உயிரின் ஓசையில் இணைந்து ஒரு இனிய
இதமான மெல்லிசை ஊற்றுபோல பொங்கிவரும் இந்த
இசை என் மனத்தையும் என் மேனியையும்
உன்னதமாக்கும் சிலசமயம் உக்கிரமாக்கும் பலசமயம்
உருவாக்கும் என்னை உரைக்கும் நான் யார் என்பதை?
உரைக்கும் என் இயல்புகளை உலகுக்கு
அழகான களையான கலை இந்த இசை....
வ.ச.தேனரசி