வேண்டாம் போதை பாதை - கவிதை போட்டி

 போதையின் பாதையில்  பேதையாய் ஆகுவார்...

மாமேதையின் போதனை யாவையும் தூகுவார்....

தாயும் தமக்கையும் தாரமும் வேறில்லை...

அதிபான மோகத்தில் முழ்கியோர் பாரிலே....

ஆகவே அறிந்துகொள் மானிட சமூகமே...

நமக்கு வேண்டாமே போதையின் பாதையே...

துக்கம் துயரையும் துறக்கவே அருந்தினால்...

நல்லுறக்கம் மரித்திடும் மதுவிச மருந்தினால்...

அதிபானம் அருந்துவதற்க் காயிரம் காரணம்...

ஆயினும் அருந்தில்லையேல் வாழ்க்கையே பூரணம்...

ஆகவே அறிந்துகொள் மானிட சமூகமே...

நமக்கு வேண்டாமே போதையின் பாதையே...

ஆளும் வர்க்கத்தின் சதிஇது உணர்ந்திடு...

குடிஅடிமை இல்லா அரசாட்சி கொணர்ந்திடு...

வேண்டும் மிருகத்திலும் மனிதத்தை காணும்பாதை

மனிதமிருக மாய்உன்னை ஆக்கிடும் போதை...

ஆகவே அறிந்துகொள் மானிட சமூகமே...

நமக்கு வேண்டாமே போதையின் பாதையே...!!


ரஹ்மான் தாசன்

Previous Post Next Post